உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா

விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா

அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கியவர் சிவா. அதன்பிறகு ரஜினி நடிப்பில் அவர் இயக்கிய அண்ணாத்த, சூர்யா நடிப்பில் இயக்கிய கங்குவா போன்ற படங்கள் தோல்வியை கொடுத்து விட்டன. இந்த நிலையில் மீண்டும் அஜித் இடத்தில் அவர் கால்ஷீட் கேட்டு வருவதாக செய்தி வெளியாகி வந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதியை சந்தித்து ஒரு கதையின் ஒன்லைனை சொல்லி இருக்கிறார் சிவா. என்றாலும், அவரது முந்தைய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்ததால் முழு ஸ்கிரிப்டும் சொல்லுமாறு கூறியுள்ளார் விஜய் சேதுபதி. அதனால் தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறார் சிவா. தற்போது தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அதன்பிறகு சிவா இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !