உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்

மலையாளத்தில் லோகா சாப்டர் 1 என்ற படத்தை தயாரித்து ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் துல்கர் சல்மான், தற்போது காந்தா என்ற படத்தையும் தயாரித்து நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கில் புதுமுக இயக்குனர் ரவி நெலகுடிட்டி என்பவர் இயக்கும் தனது 41 வது படத்தில் நடிக்கப் போகிறார் துல்கர் சல்மான். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கமிட்டாகி உள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சில நடிகைகள் பரிசீலனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பாகுபலியில் ராஜமாதாவாக நடித்த ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அப்படக்குழு அறிவித்திருக்கிறது. இந்த படம் தவிர தற்போது தமிழில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர்-2 படத்திலும் அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !