உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுசுக்கு பொங்கியது ஏன்? அவருக்கு எதிராக செயல்படுபவர்கள் யார்?

தனுசுக்கு பொங்கியது ஏன்? அவருக்கு எதிராக செயல்படுபவர்கள் யார்?


இட்லி கடை பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் மானேஜர் ஸ்ரேயாஸ், ‛‛நீங்க நல்லவரா இருங்க, ரொம்ப நல்லவராக இருக்காதீங்க. ஐ டி விங்கை கத்துக்கோங்க. ஒருத்தன் 10 பேரை எதிர்த்தால் அவன் வீரன். ஒருத்தனை 10 பேரை எதிர்த்தால் அவன் தலைவன். உங்களால வாழ்ந்தவங்க, நேருக்கு நேர் உங்களுடன் நடிச்சு மோதினால் ஓகே.. கம்யூட்டர் வெச்சு ஏதோ செய்றாங்க'' என மறைமுக சாடினார்.

அதே போல் தனுஷ் ஹேட்டர்ஸ் குறித்து பேசினார். ‛‛ஒரு 30 பேர் ஒரு கூட்டணி வெச்சு ஏதோ பண்ணுறாங்க'' என்றார். தனக்கு எதிராக சமூக வலைதளத்தில் சிலர் சதி செய்வது போல அவர் பேச்சு இருந்தது. தனுஷால் வாழ்ந்தவர்கள் என ஸ்ரேயாஸ் சொல்வது சிவகார்த்திகேயனையா? விக்னேஷ் சிவன், நயன்தாராவையா? அனிருத்தையா? என கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் மூவரும் தனுஷால் வளர்ந்தவர்கள். இப்போது நட்பில் இல்லாதவர்கள். இவர்களில் யாரை சொல்கிறார்கள். இவர்கள் தனுசுக்கு எதிராக செய்கிறார்கள் என்று பலர் கேட்கிறார்கள். இவர்கள் சோஷியல் மீடியாவில் தனுசுக்கு எதிராக ஆட்கள் வைத்து தவறான செய்தி, மீம்ஸ் பரப்புகிறார்களா அல்லது தனுஷ் தரப்பு இப்படி நினைத்து கொண்டு புலம்புகிறதா என்றும் கோலிட்டில் பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !