என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால்
ADDED : 7 hours ago
மலையாளத்தில் கடந்த 45 வருடங்களில் கிட்டத்தட்ட 365 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் மோகன்லால். மலையாளத்தையும் தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் தனது பங்களிப்பை கொடுத்திருக்கும் மோகன்லால் தற்போதும் தொடர்ந்து ஹீரோவாக பிசியான நடிகராக நடித்து வருகிறார். அதே சமயம் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசும்போது என்னுடைய சில பழைய படங்களை பார்க்கும் போது இப்போதும் என் கண்கள் கலங்குகிறது என்று கூறியுள்ளார்.
“காரணம் அந்த படங்களில் என்னுடன் நடித்த பலர் இப்போது உயிருடன் இல்லை. அதை பார்க்கும்போது என்னை அறியாமலேயே என் கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது.. நானும் ஒருநாள் போகத்தானே போகிறேன். என்னதான் மிகப்பெரிய நடிகர் என்றாலும் கூட, நானும் ஒரு சராசரி மனிதன் தானே” என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார் மோகன்லால்.