ஆர்யாவின் அனந்தன் காடு படத்திற்கு ஏ சான்றிதழ்
ADDED : 18 minutes ago
ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், லூசிபர் பட கதையாசிரியர் எழுதியுள்ள கதையில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் 'அனந்தன் காடு' . ரெஜினா, நிகிலா விமல், இந்திரன்ஸ், சுனில் ஆகியோர் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர் . அனந்தன் காடு வருகின்ற ஜூன் 25ம் தேதியன்று திரைக்கு வருவதையொட்டி இந்த படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இதை வைத்து பார்த்தால் இந்த படத்தில் வைலன்ஸ் அதிகமாக இருப்பது போல் தெரிகிறது. மேலும், இப்படம் 2 மணி நேர 38 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக தயாராகியுள்ளது என தணிக்கை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.