‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா?
ADDED : 52 days ago
நடிகர் சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து வருகிறார். ரவீணா டன்டான் , ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ. 80 கோடிக்கு கைப்பற்றியுள்ளனர் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமை பிஸ்னஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.