பாகுபலி பாணியில் உருவாகி இருக்கும் மோகன்லாலின் விருஷபா
மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் அவரது டைரக்ஷனில் பரோஸ் என்கிற திரைப்படம் வெளியானது. வரலாற்று படமாக வெளியான அந்த படத்தில் மோகன்லால் மொட்டை தலையுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்த அவர் மீண்டும் ஒரு வரலாற்று பின்னணியில் பேண்டஸி படமாக உருவாகியுள்ள விருஷபா என்கிற படத்தில் நடித்து வருகிறார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்களான ஏக்தா கபூர், ஷோபா கபூர் மற்றும் சில தயாரிப்பு நிறுவனங்களுடன் இந்த படத்தை இருந்து தயாரிக்கின்றனர். இந்த படம் தெலுங்கு, மலையாளம் என இரு மொழிகளில் தயாராகி வருகிறது. நந்தா கிஷோர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
வரும் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. டீசரை பார்க்கும்போது மீண்டும் ஒரு புதிய பாகுபலி படத்தை மோகன்லால் நடிப்பில் பார்க்கப்போகும் உணர்வு தான் தோன்றுகிறது. மோகன்லாலின் அதிரடியான மன்னர் கெட்டப்பும் இந்த காட்சிகளில் இடம்பெறும் பிரம்மாண்ட அரண்மனை மற்றும் கட்டிடங்களின் அமைப்பும் குறிப்பாக ஒரு குழந்தை பிறப்பும் என எல்லாமாக சேர்ந்து ஒரு பாகுபலி எபெக்டை இந்த படத்திற்கு கொடுத்துள்ளது. அந்த வகையில் விருஷபா திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய வரலாற்று ட்ரீட் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.