உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இப்போதும் மனதை அழுத்தும் சோகம் ; அனுபமா பரமேஸ்வரன்

இப்போதும் மனதை அழுத்தும் சோகம் ; அனுபமா பரமேஸ்வரன்


நடிகை அனுபவ பரமேஸ்வரன் சமீப நாட்களாக தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அது மட்டுமல்ல ஜூலை மாதம் மலையாளத்தில் ‛ஜேஎஸ்கே', ஆகஸ்டில் தெலுங்கில் ‛பர்தா', தற்போது செப்டம்பரில் சமீபத்தில் ‛கிஷ்கிந்தாபுரி' என தொடர்ந்து மாதத்திற்கு ஒரு படம் என்கிற கணக்கில் அவரது படங்கள் வெளியாகி வருகின்றன. இதில் கிஷ்கிந்தாபுரி படம் ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

சமீப காலமாகவே தனது படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் சோகமான விஷயங்களை அனுபவ பரமேஸ்வரன் தொடர்ந்து பேசி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்று தனது நண்பனுடன் ஏற்பட்ட சிறிய மனஸ்தாபம் இப்போது வரை தன் மனதை எப்படி பாதித்து வருகிறது என்பது பற்றி பகிர்ந்து கொண்டார் அனுபமா பரமேஸ்வரன்.

இது பற்றி அவர் கூறும்போது, “என்னுடைய பழைய நண்பன் ஒருவனுடன் சில காரணங்களால் எதுவும் பேசாமல் இருந்தேன். அவன் எனக்கு மெசேஜ் செய்தான். ஆனால் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவனை ஏதேச்சையாக நான் பார்த்தேன்.. அப்போதும் கூட அவனுடன் பேசவில்லை. அவன் அனுப்பிய அந்த மெசேஜுக்கும் நான் பதில் அளிக்கவில்லை. காரணம் இனிமேல் அவனால் எந்த பிரச்சனையும் வேண்டாம் என தீர்மானித்து இருந்ததால் அவனுக்கு பதில் மெசேஜ் அனுப்பவில்லை. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அவன் இறந்து விட்டான்.. கேன்சர் பாதிப்பால்.. அதுதான் அவன் எனக்கு கடைசியாக அனுப்பிய மெசேஜ். அதற்கு கூட நான் பதில் அளிக்கவில்லை. இப்போது வரை அது ஒரு மோசமான ஞாபகமாக என் மனதை பாதித்துக் கொண்டிருக்கிறது. இதை என் மனதில் இருந்து துடைத்தெறிய விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !