அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை!
ADDED : 49 days ago
‛ஹரிஹர வீரமல்லு' படத்தை அடுத்து பவன் கல்யாண் நடித்துள்ள படம் ‛ஓஜி'. சுஜித் இயக்கி உள்ள இந்த படத்தில் பவன் கல்யாணுடன் எம்ரான் அஸ்வின், பிரியங்கா மோகன், அர்ஜுன்தாஸ், பிரகாஷ்ராஜ் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தமன் இசை அமைத்துள்ள இந்த படம் வருகிற செப்டம்பர் 25ம் தேதி திரைக்கு வருகிறது. 250 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்கா பிரீமியரில் இந்த படம் 2 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. இதுவரை எந்த ஒரு இந்திய படமும் அமெரிக்காவில் இந்த அளவுக்கு வசூலித்ததில்லை என்கிறார்கள்.