உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு?

சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு?


அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛சக்தித் திருமகன்'. இந்த படத்துக்கு அவரே இசையமைத்து தயாரித்துள்ளார். அவருடன் சுனில் கிர்பாலனி, வாகை சந்திரசேகர், செல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்தது. அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படம் திரைக்கு வந்த இரண்டு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் உலக அளவில் 1.7 கோடி வசூலித்திருக்கிறது.

அதேபோன்று கவின் நடிப்பில் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்த இன்னொரு படம் ‛கிஸ்'. நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ராணி மற்றும் விடிவி கணேஷ், தேவயானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். காதல் கலந்த காமெடி கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் கடந்த இரண்டு நாட்களில் பாக்ஸ் ஆபீசில் 1.6 கோடி வசூலித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !