மேலும் செய்திகள்
பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி
1 days ago
லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு
1 days ago
'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி
1 days ago
ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, கபடி போன்ற தமிழ் பாரம்பரியங்களை மையமாக கொண்டு பல படங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் 'ஜாக்கி'. யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணாஸ் ஆகியோர் கதை நாயகர்களாக நடித்துள்ளனர். அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் பிரகபல் கூறியதாவது: மதுரைக்கு செல்லும்போது கிடா சண்டை பந்தையத்தை நேரில் பார்த்தேன். தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி போன ஒரு விளையாட்டு என்று கண்டறிந்தேன். பிறகு அது சம்பந்தமான நிறைய தரவுகளை சேகரிக்க தொடங்கினேன். மதுரையிலேயே தங்கி கதை எழுத ஆரம்பித்தேன். இந்த படத்தில் கிடா சண்டைகளை காட்சிப்படுத்தியுள்ளேன். அதை உண்மைக்கு நெருக்கமாக, மிகவும் நேர்த்தியாக படமாக்கியுள்ளேன். திரையில் அந்த காட்சிகளில் கதாநாயகனுக்கும், கிடாவுக்கும் இருக்கும் பிணைப்பை பார்க்கும்பொழுது உங்களுக்கு தெரியவரும்'' என்றார்.
1 days ago
1 days ago
1 days ago