மேலும் செய்திகள்
ரிஷப் ஷெட்டியைப் பாராட்டிய ஜூனியர் என்டிஆர்
2 minutes ago
50 வயதில் விஜய் பட ஹீரோயினின் திருமண ஆசை
2 minutes ago
பிகினி உடை சர்ச்சை ; சாய்பல்லவி வெளியிட்ட விளக்க வீடியோ
2 minutes ago
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த குஷி படம் கடந்த வெள்ளிகிழமை ரீ ரிலீஸ் ஆனது. தமிழகம் முழுக்க 260க்கும் அதிகமான தியேட்டர்களில் இந்த படம் வெளியானது. முதல் நாள் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கில்லி பாணியில் படத்தின் பாடல்களை தியேட்டரில் கொண்டாடினர் ரசிகர்கள். அதனால் படம் வெற்றி பெறும் நல்ல லாபத்தை பெற்று தரும் என்று தியேட்டர் அதிபர்கள் நம்பினர்.
ஆனால், கரூர் சம்பவத்தால் படத்தின் வெற்றிக்கும், வசூலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுக்க விஜய் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இந்த வாரம் குஷி படத்தின் வசூல் பாதிக்கும் என்று படத்தை வெளியிடுபவர்கள் பயப்படுகிறார்கள்.
இந்த சூழ்நிலை காரணமாக படத்தை விளம்பரப்படுத்தவும் முடியாத நிலை. ஆகவே, கில்லி, சச்சின் அளவுக்கு குஷி ரீ ரிலீசில் வசூலிக்காது என்று கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தால் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்துக்கும் பாதிப்பு வருமா? அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் படம் ரிலீஸ் என்றாலும், இந்த சம்பவத்தில் பாதிப்பை குறைய வாய்ப்பு இருக்குமா என்று அந்த படக்குழு பதறுகிறதாம். ஜனநாயகன் படம் சம்பந்தப்பட்ட யாரும் கரூர் துயரம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
2 minutes ago
2 minutes ago
2 minutes ago