உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிஷப் ஷெட்டியைப் பாராட்டிய ஜூனியர் என்டிஆர்

ரிஷப் ஷெட்டியைப் பாராட்டிய ஜூனியர் என்டிஆர்

ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ள படம் 'காந்தாரா சாப்டர் 1'. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் ஜூனியர் என்டிஆர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் பேசுகையில், “என் தாய் வழி மூதாதையர்கள் கர்நாடகாவின் குண்டாப்பூராவைச் சேர்ந்தவர்கள். என் பாட்டி எனக்கு 'குல்கா தேவா' மற்றும் 'பஞ்ஜுர்லி' பற்றிய கதைகளைச் சொல்வார். நான் அந்தக் கதைகளை கற்பனை செய்து கனவு காண்பேன், அது எப்படி இருக்கும் என்று ஆச்சரியப்படுவேன். ரிஷப் ஷெட்டி காந்தாரா மூலம் பெரிய திரையில் என் கனவை நனவாக்கியுள்ளார்.

ரிஷப்பால், உடுப்பி கிருஷ்ணா கோயிலுக்குச் சென்று என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடிந்தது. நீரில் இருக்கும் ஒரு பழைய கோயிலில் படப்பிடிப்பு செய்ய அவர்கள் போடும் கடின உழைப்பைப் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டேன். ரிஷப் ஷெட்டி சினிமாவின் அனைத்து 24 கைவினைகளிலும் கை தேர்ந்தவர். 'காந்தாரா சாப்டர் 1' இந்திய சினிமாவில் வரலாற்று பிளாக்பஸ்டராக இருக்க வேண்டும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !