மேலும் செய்திகள்
ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள்
8 hours ago
250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி'
8 hours ago
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சிவா கொரட்டாலா இயக்கத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் 'தேவரா திரைப்படம் வெளியானது. ஜான்வி கபூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் உருவானபோது இது இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது என்று அறிவிப்பு வெளியிட்டு அதன்படி முதல் பாகமும் வெளியானது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் கூட 500 கோடி வசூலித்தது.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்கிற கேள்வியும் கூட, கடந்த ஒரு வருடத்தில் ரசிகர்களிடம் எழுந்தது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி, ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் துவங்க இருப்பது குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
8 hours ago
8 hours ago