உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஷ்மிகாவின் 30வது பிறந்தநாளில் வெளியான 'மைஸா' படத்தின் அதிரடி போஸ்டர்!

ராஷ்மிகாவின் 30வது பிறந்தநாளில் வெளியான 'மைஸா' படத்தின் அதிரடி போஸ்டர்!


சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்ட ராஷ்மிகா, இன்று தனது 30வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். காதல் காமெடி கலந்த பொழுதுபோக்கு படங்களில் நடித்து வந்துள்ள ராஷ்மிகா, தனக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது மைஸா என்ற பான் இந்தியா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். ரவீந்திர புல்லே இயக்கும் இந்த படத்தில் வழக்கமான வசீகரத் தோற்றத்திலிருந்து மாறுபட்டு மூர்க்கத்தனத்தை காட்டும் வேடத்தில் நடித்திருக்கிறார் ராஷ்மிகா. அது குறித்த ஒரு போஸ்டர் ஒன்றை இன்றைய தினம் மைஸா படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ராஷ்மிகாவின் மூக்கிலும் நெற்றிகளும் ஆழமான வெட்டு காயங்கள். அதையும் தாண்டி கோபம் நிறைந்த பார்வை வெளிப்படுகிறது.

பழங்குடியின பெண்ணாக ராஷ்மிகா நடிக்கும் இந்த கதாபாத்திரம் மண்ணின் வீர பெண்ணாக அவரை அடையாளம் காட்டக் கூடியதாக அமைந்திருக்கிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !