'மீசைய முறுக்கு 2' இரண்டாம் பாடல் ஏப்.8ல் வெளியாகிறது!
கடந்த 2017ம் ஆண்டில் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து, இயக்கி, நடித்து வெளியான படம் 'மீசைய முறுக்கு'. மீசைய முறுக்கு, ஹிப் ஹாப் ஆதி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை மையப்படுத்தி படமாக உருவாக்கி வெற்றி பெற்றவர்.
முதல் பாகத்தை தயாரித்த சுந்தர்.சியின் அவ்னி மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹிப்ஹாப் ஆதியும் இந்த பாகத்தை தயாரிக்கிறார்.
மீசைய முறுக்கு 2 பீரியட் மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டங்களில் நடைபெறும் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் சைத்ரா ஜி ஆர்சர், கெட்டிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், ஹர்ஷத் கான், நாசர், நரேன் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்திலிருந்து முதல் பாடலாக 'ஆரா 10க்கு 10' என்கிற பாடல் வெளியாகி இந்த நிமிடம் வரை ரீல்ஸ், ஷார்ட்ஸ்-ல் ட்ரெண்ட் அது தான். இதையடுத்து மீசைய முறுக்கு 2 படத்தில் இருந்து இரண்டாம் பாடல் வருகின்ற ஏப்ரல் 8ம் தேதியன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.