'நூறு சாமி' படத்தின் டீசர் வெளியானது!
இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி வெற்றி கூட்டணியில் வெளியான 'பிச்சைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி 'நூறு சாமி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷன், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இன்று இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இந்த டீசரின் படி பார்த்தால் தமிழகத்தில் இன்னும் கிராமங்களில் பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும், குறிப்பாக கல்யாணம் ஆகி கணவனை இழந்த பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்கிற வழக்கத்தின் மத்தியில் ஒரு தாய் எப்படி வாழ்கிறாள்? பெண்களை அடக்கி வைத்து சாதியை பேசுபவர்கள் என பல விஷயங்களை இந்த படம் பேசுகிறது . இந்த டீசரில் சுவாசிகா நமது கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளார். அவரை தவிர விஜய் ஆண்டனி தோற்றம் நம்மை கவர்கிறது. இந்த டீசரில் அஜய் திஷன், கருணாஸ் ஆகியோர் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இப்படம் மே மாதத்தில் திரைக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.