உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மிஸ்டர். எக்ஸ்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் மற்றும் டிஜிட்டல்,சாட்டிலைட் உரிமை விவரங்கள்!

'மிஸ்டர். எக்ஸ்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் மற்றும் டிஜிட்டல்,சாட்டிலைட் உரிமை விவரங்கள்!


'எப்ஐஆர்' பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'மிஸ்டர். எக்ஸ்'. சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைஷா, அதுல்யா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

ஸ்பை த்ரில்லர் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளனர். மிஸ்டர்.எக்ஸ் படம் இம்மாதத்திற்குள் திரைக்கு வருகிறது. இன்று இந்த படத்திற்கு தணிக்கை யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர். மேலும், இந்த படம் 2 மணி நேர 27 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக தயாராகியுள்ளது என்கிறார்கள். இந்த போஸ்டரில் இதன் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமைகளை ஜியோ ஹாட் ஸ்டார் மற்றும் விஜய் டிவி என இரு நிறுவனங்களும் கைபற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !