மேலும் செய்திகள்
திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ்
14 minutes ago
ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்!
14 minutes ago
இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா?
14 minutes ago
'குட் பேட் அக்லி' படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 64வது படத்தில் நடிக்க போகிறார் அஜித்குமார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் தீவிரமாக பங்கேற்று வரும் அஜித்குமார், துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். இந்த போட்டிகளில் அஜித் குமாரின் அணி மூன்றாவது பரிசு பெற்றதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அஜித்குமார் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறும்போது, ''கார் ரேஸ்களில் கவனம் செலுத்த தொடங்கிய பிறகு சினிமா, வெப் தொடர்கள் பார்க்க கூட எனக்கு நேரம் கிடைப்பதில்லை. விமானத்தில் பயணிக்கும் போதும் மட்டுமே ஓய்வு கிடைக்கிறது. அந்த நேரத்தில் கூட தூங்கி விடுகிறேன். முக்கியமாக எனக்கு தற்போது தூங்குவது தான் ஒரு பிரச்சனையாக உள்ளது. அப்படியே தூங்கினாலும் கூட ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் தான் தூங்குகிறேன். அந்த அளவுக்கு தூக்கமும் எனக்கு ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது'' என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் அஜித் குமார்.
14 minutes ago
14 minutes ago
14 minutes ago