உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ்

திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ்


பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் மூன்று மகன்களில் இரண்டாவது மகனும் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியுமான அல்லு சிரிஷ் தனது அண்ணனைப் போலவே திரையுலகில் நுழைந்து சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் ராதாமோகன் இயக்கிய 'கவுரவம்' என்கிற படத்தில் கூட கதாநாயகனாக நடித்தார். இருந்தாலும் அவருக்கென பெரிய அளவில் இப்போது வரை பிரேக் கிடைக்காமல் சினிமாவில் போராடி வருகிறார்.

இந்த நிலையில் விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார் அல்லு சிரிஷ். தனது நீண்ட நாள் தோழியான நயனிகா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் அல்லு சிரிஷ். அது குறித்த நிச்சயதார்த்த தேதி அறிவிப்பை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்

வரும் அக்.,31ம் தேதி இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. தனது தாத்தா அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்த நாள் தினத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அல்லு சிரிஷ், சமீபத்தில் மறைந்த தனது பாட்டி அல்லு கனகரத்தினம் தன்னை திருமண கோலத்தில் பார்க்க மிகுந்த ஆசையுடன் இருந்தார் என்றும் ஆனால் அது நிறைவேறாமலேயே எங்களைப் பிரிந்து சென்று விட்டாலும் அவரது ஆசிகள் எங்களுக்கு எப்போதும் உண்டு என்றும் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !