மேலும் செய்திகள்
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1 hours ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1 hours ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1 hours ago
தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது 'தம்மா' என்ற ஹிந்திப் படத்திலும், 'தி கேர்ள் பிரண்ட்' என்ற தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார். கர்நாடக மாநிலம் கூர்க் நகரைச் சேர்ந்தவர் ராஷ்மிகா. கர்நாடகாவில் தசரா கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக நடக்கும்.
தசரா குறித்து ராஷ்மிகா, “எனது அன்பர்களுக்கு தசரா வாழ்த்துக்கள். இந்த வருடம், 'தம்மா' டிரைலர் மற்றும் எங்கள் பாடலுக்கு நீங்கள் பொழிந்த அன்புக்காக நான் கூடுதல் நன்றியுடன் இருக்கிறேன். உங்கள் உற்சாகம், தொடர்ச்சியான ஆதரவு… என ஒவ்வொரு தருணத்தையும் பெரிதாகவும் மகிழ்ச்சியாகவும் ஆக்குகிறீர்கள். மேலும், பிரமோஷன்களின் போது உங்கள் அனைவரையும் விரைவிலேயே பார்க்கக் காத்திருக்க முடியவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேக்கப் இல்லாமல், சாதாரண புடவை ஒன்றை அணிந்து அவர் பகிர்ந்த போட்டோக்கள் அடங்கிய பதிவு இதுவரையில் ஒரு மில்லியன் பார்வைகளுக்கும் மேல் லைக்குகளைப் பெற்றுள்ளது.
1 hours ago
1 hours ago
1 hours ago