முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம்
ADDED : 215 days ago
அறிமுக இயக்குனர் கிருஷ்ணா பலராம் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் 'நிறம்'. இதனை பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான முகேன் ராவ் நடிக்கின்றார். இவருடன் இணைந்து பிரீத்தி அஸ்ரானி, தன்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்குகின்றனர்.