மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன்
ADDED : 2 days ago
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஹிருத்திக் ரோஷன். கடந்த சில படங்களாக அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது மீண்டும் பட தயாரிப்பில் இறங்க திட்டமிட்டுள்ளார் ஹிருத்திக் ரோஷன். ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டில் வெளியான 'சூப்பர் 30' படத்தை அவரின் ஹெச்ஆர்எக்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார். இப்போது 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஆர்வத்தை காட்ட தொடங்கியுள்ளார். அதன்படி, ஹிருத்திக் ரோஷன், அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனத்துடன் இணைந்து வெப் தொடர்களை தயாரிக்கவுள்ளார் என பாலிவுட் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.