இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....!
ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் வகையில், த்ரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதில் நடிகை மீனா நடிப்பில் உருவான 'சீக்ரெட் ஸ்டோரிஸ் ஆப் ரோஸ்லின் என வரிசையாக வெளிவரவுள்ளது.
தடயம்
இயக்குநர் நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி, மூணாறு ரமேஷ், ராஜ் திரன்தாசு நடிப்பில் வெளிவந்துள்ள வெப் தொடர் 'தடயம்'. க்ரைம், த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த தொடர் இஜ்று (பிப்.27ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
சீக்ரெட் ஸ்டோரிஸ்: ரோஸ்லின்
மலையாள இயக்குநர் சுமேஷ் நந்தகுமார் இயக்கத்தில், நடிகை மீனா, சஞ்சனா தீபு, வினீத், அனிஷமா அனில்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் 'சீக்ரெட் ஸ்டோரிஸ்: ரோஸ்லின்'. கனவில் வரும் பயங்கர காட்சிகளை வைத்து நாயகி துப்பு துலக்குவதன் மூலம் என்ன ஆகிறது என்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.இந்த வெப் தொடர் இன்று (பிப். 27ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
அக்யூஸ்ட்
பாலிவுட் நடிகர்கள் கொங்கனா சென் சர்மா, பிரதீபா நடித்துள்ள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் ' அக்யூஸ்ட்'. இந்த திரைப்படம் இன்று ( பிப்.27ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஹனி
உண்மை சம்பவத்தை அடிப்படையாகத் தெலுங்கில் எடுக்கப்பட்ட த்ரில்லர் படம் ' ஹனி'. தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. நவீன் சந்திரா, திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இன்று (பிப்.27ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஹவுஸ்மெய்ட்
இயக்குநர் பால் பீக் இயக்கத்தில் சிட்னி ஸ்வீனி மற்றும் அமண்டா செப்ரிட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ' ஹவுஸ்மெய்ட்'. வீட்டில் வேலை செய்யும் பெண், அந்த வீட்டில் சந்திக்கும் பிரச்னையில் இருந்து வெளிவந்தாரா? என்ற கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று ( பிப்.27ம் தேதி) வெளியாகி உள்ளது.