உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி

காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி


கன்னட நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இயக்கிய காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் 2வது பாகமாக ‛காந்தாரா சாப்டர் 1' தற்போது வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் காந்தாரா படம் உருவாதற்கு காரணமான தனது சொந்த கிராமமான குந்தபுராவில் குடும்பத்துடன் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி.

தனது கிராமும், தனது குலதெய்வ கோயிலும்தான் தனக்கு பெரிய வாழ்க்கை கொடுத்ததாக நம்பும் ரிஷப் ஷெட்டி அதற்காக அந்த கிராமத்திலேயே வாழ முடிவு செய்து பெங்களூருவில் தான் வசித்த சொகுசு பங்களாவை காலி செய்து விட்டு கிராமத்தில் உள்ள பூர்வீக விட்டிற்கு செல்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''எனது மண்ணின் பெருமையை 'காந்தாரா' மூலம் உலகத்துக்கு சொல்லிவிட்டேன். அந்த மண்ணுக்கு நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன். அதனால் அங்கேயே சென்று வாழ முடிவு செய்துவிட்டேன். எனது குழந்தைகளை அங்குள்ள பள்ளியில் சேர்க்கப் போகிறேன். எனது முடிவில் என் மனைவிக்கும் மகிழ்ச்சியே'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !