ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னணி நடிகைகள்
ADDED : 258 days ago
பாலிவுட்டில் ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு, ஜீரோ, அட்ராங்கி ரே போன்ற படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆனந்த்.எல். ராய். தற்போது இவர் தனுஷ், கிர்த்தி சனோனை வைத்து 'தேரே இஸ்க் மே' என்கிற படத்தை இயக்கியுள்ளார். தமிழ், ஹிந்தியில் படம் ரிலீஸாகிறது. இதையடுத்து ஆனந்த்.எல்.ராய் தான் நீண்டகாலமாகவே உருவாக்க நினைத்த 'நயி நவேலி' என்ற படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் கிர்த்தி சனோன், யாமி கவுதம் என இரு நாயகிகளும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு இதே படத்தை ஆனந்த்.எல்.ராய் தயாரிக்க, பாலாஜி மோகன் இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது ஆனந்த்.எல். ராயே இந்த படத்தை இயக்க முன்வந்துள்ளார். இது ஒரு பேண்டஸி படமாக உருவாகிறது.