உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை'

இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை'


மலையாளத்தில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான படம் 'லோகா சாப்டர்-1'. கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை டொமினிக் அருண் இருக்கியுள்ளார். 30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூலித்து இருக்கிறது.

கிராமப்புறங்களில் ரத்தக்காட்டேரி என்று சொல்லப்படும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட கதையில் இப்படம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த லோகா படம் அக்டோபர் 23ம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தனுஷ் இயக்கி நடித்து கடந்த ஒன்றாம் தேதி திரைக்கு வந்த படம் இட்லி கடை. இதுவரை இந்த படம் 50 கோடி வசூலை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்த படம் இம்மாதம் 29ம் தேதி நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !