500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1'
ADDED : 11 minutes ago
கன்னடத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த படம் 16 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 450 கோடி வசூலித்தது. இந்த நிலையில் மீண்டும் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து அக்டோபர் இரண்டாம் தேதி திரைக்கு வந்த படம் 'காந்தாரா சாப்டர் 1'. ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் ஒரே வாரத்தில் 460 கோடி வரை வசூலித்து இருக்கிறது.
அந்த வகையில் காந்தாரா படம் மொத்தம் 450 கோடி வசூலித்திருந்த நிலையில் தற்போது இந்த காந்தாரா சாப்டர்-1 படமோ ஒரே வாரத்தில் அந்த வசூலை முறியடித்து தொடர்ந்து வசூலித்து வருகிறது. இப்படம் 500 கோடியை சீக்கிரத்தில் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.