உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்!

'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்!


பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீ கவுரி ப்ரியா, அப்பாஸ், மரியம் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ' ஹாப்பி ராஜ்'. பியான்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படங்களில் ஹாப்பி ராஜ் படம் தான் அதிகமாக பிஸ்னஸ் ஆகியுள்ளது என்கிறார்கள். இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இப்போது இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மைத்ரி மூவி நிறுவனம் விநியோகம் செய்வதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !