உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம்

ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம்


'எப்ஐஆர்' பட இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் 'மிஸ்டர். எக்ஸ்'. சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைஷா, அதுல்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

ஸ்பை த்ரில்லர் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர். கடந்த சில வருடங்களாக இப்படம் தயாரிப்பில் உள்ளது. தற்போது இந்த படத்தை 2.33 மணி நேர படமாக படத்தொகுப்பு செய்து ரிலீஸூக்கு தயார் செய்து வைத்துள்ளனர். மேலும், இந்த படத்தின் டிரைலர் உடன் ரிலீஸ் தேதியை அறிவிப்பதற்காக தயார் செய்து வைத்துள்ளனர் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !