அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு
ADDED : 13 minutes ago
தாணு தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படம் 'அரசன்'. வட சென்னை கதைக்கள பின்னணியில் உருவாகும் இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். ஏற்கனவே இந்த படத்தின் புரோமோ ஷூட் முடிவடைந்துள்ளது. வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு படப்பிடிப்பை துவங்குகின்றனர். இதன் புரோமோ வீடியோ வருகின்ற அக்டோபர் 16ம் தேதியன்று வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கிச்சா சுதீப், உபேந்திரா, ராணா டகுபதி போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் கிச்சா சுதீப் தான் நடிக்க வாய்ப்பு அதிகம் என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். சுதீப்பின் கன்னட படத்தை தாணு தயாரித்துள்ளார். அந்தவகையில் இருவருக்கும் நல்ல நட்பு உள்ளதால் அரசன் படத்தில் சுதீப் நடிக்கலாம் என்கிறார்கள்.