சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா
ADDED : 21 minutes ago
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'பராசக்தி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதையடுத்து சிவகார்த்திகேயன், ‛டான்' பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இதில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஒரு சில காரணங்களால் இந்த படத்திலிருந்து ராஷ்மிகா விலகிவிட்டாராம். இதனால் நாயகியாக ஸ்ரீ லீலாவை சிவகார்த்திகேயன் பரிந்துரை செய்துள்ளார். இதனால் அவர் நடிக்கலாம் என தெரிகிறது.
சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' படத்தில் ஸ்ரீ லீலாவும் இணைந்து நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.