உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ்

காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ்


தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். கடந்த வருடம் அவரது காதலர் ஆண்டனி தட்டில் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். ஆண்டனி கிறிஸ்துவர் என்பதால் இந்து, கிறிஸ்துவ முறைப்படி இந்தத் திருமணம் நடைபெற்றது.

தனது காதல் பற்றியும், திருமணம் பற்றியும் சமீபத்தி பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.

“2010ல் கல்லூரியில் படித்த போது எங்களுக்குள் காதல் மலர்ந்தது. எங்களுக்கு நேரம் தேவைப்பட்டது. நான் கல்லூரியை முடிக்க வேண்டும், எனது சினிமா வாழ்க்கையை கட்டமைக்க வேண்டும் என்று இருந்தது. ஐந்தாறு வருடங்கள் நாங்கள் இருவருமே வெகு தூரம் பிரிந்து இருந்தோம். ஆண்டனி கத்தாரில் இருந்தார், நான் சென்னையில் இருந்தேன். அவர் இந்தியா திரும்பிய பிறகு எங்களுக்கு செட்டில் ஆகவும் நேரம் தேவைப்பட்டது.

இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இருவரது வீட்டிலும் பிரச்னை வரும் என்று எதிர்பார்த்தோம். நான்கு வருடங்களுக்கு முன்பு எனது காதலைப் பற்றி அப்பாவிடம் சொன்னேன். அவர் எளிதாகவே எடுத்துக் கொண்டார். நான் கனவு கண்டது போல அது நடக்கவில்லை.

எங்களுக்கு இடையில் உள்ள நெருக்கத்தை பெருமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். 2018ல் ஆண்டனி எனக்கு பரிசளித்த நாய்க்குட்டிக்கு 'நைக்' எனப் பெயர் வைத்தேன். ஆண்டனி என்ற ஆங்கில எழுத்திலிருந்து 'Ny', எனது பெயரிலிருந்து 'Ke' இரண்டடையும் இணைத்து 'Nyke' எனப் பெயர் வைத்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !