உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு!

ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு!


சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் ரோபோ சங்கர் குறிப்பிடத்தக்கவர். முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து வந்த இவர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார். பின்னர் அதிலிருந்து குணமாகி மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த செம்டம்பர் 18 ஆம் தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் ரோபோ சங்கரின் நினைவாக நடிகர் டிங்கு, ரோபோடிக் யானையை குபேரர் கோவிலுக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த தகவலை ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ஒரு வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !