தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது!
ADDED : 7 minutes ago
'ரெட்ரோ' படத்தை அடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் 'கருப்பு'. இப்படத்தில் அவருடன் திரிஷா, சுவாசிகா, காளி வெங்கட், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்த படத்தை தீபாவளிக்கு திரையிட திட்டமிட்டனர். ஆனால் விஎப்எக்ஸ் பணிகள் தாமதமானதால் ரிலீஸை தள்ளி வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் இந்த கருப்பு படத்தின் முதல் பாடலை அக்டோபர் 20ம் தேதியான நாளை தீபாவளி அன்று வெளியிடுவதாக படக்குழு ஒரு போஸ்டர் மூலம் அறிவித்திருக்கிறது.