ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன்
ADDED : 1 minutes ago
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் நடித்த 'டியூட்' படம், 2 நாளில் 45 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு பதிப்பு சேர்த்து உலகளவில் இந்த வசூல் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் தீபாவளி ரேசில் வின்னர் டியூட் என தெரிய வருகிறது.
இன்றும், நாளையும் நல்ல புக்கிங் இருப்பதால், 'லவ்டுடே, டிராகன்' படங்களை போல டியூட் 100 கோடி வசூலை தாண்டும். பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் அடிப்பார் என கோலிவுட்டில் கூறப்படுகிறது. இந்த வெற்றியால் பிரதீப்பின் மார்க்கெட், சம்பளம் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.