உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலாவின் அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபடும் மாரி செல்வராஜ்

பாலாவின் அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபடும் மாரி செல்வராஜ்

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவில் சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன் என ஆரம்ப காலகட்டத்தில் தரமான படங்களை உருவாக்கியவர். கடந்த சில வருடங்களாக பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார், வர்மா, தார தப்பட்டை, வணங்காண் போன்ற படங்கள் வரவேற்பை பெறவில்லை.

தற்போது பாலா தனது அடுத்த படத்திற்காக கதை, திரைக்கதை எழுதும் பணியை துவங்கி உள்ளார். திருவண்ணாமலையில் தங்கி இந்த பணியை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களாக பாலா கதை விவாதத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் கலந்து கொள்வார். தற்போது அவர் பிஸியாக உள்ளதால் இயக்குனர் மாரி செல்வராஜ், பாலாவிற்கு பக்கபலமாக உள்ளார். இப்போது இந்த கதை விவாதத்தில் மாரி கலந்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !