குடும்பத்தின் மூத்தவர்களுடன் சமந்தா தம்பதிக்கு நடந்த வழிபாட்டு நிகழ்ச்சி
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. அவருக்கும் இயக்குனர் ராஜ் நிடிமொருவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. சமந்தா நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த 'மா இன்டி பங்காரம்' படம் பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றது. அப்படத்தின் வெற்றி விழா ஜூன் மாதம் நடைபெற்ற போது தான் தாய்மை அடைந்திருப்பதாக அவர் அறிவித்தார்.
அதற்கடுத்து செப்டம்பர் மாதம் வளைகாப்பு நடந்ததாக சொல்லப்பட்டது. அப்போது நடைபெற்ற பூஜை புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டிருந்தார்.
இன்றும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள். சமந்தா மற்றும் அவரது கணவர் ராஜ் ஆகியோரது வீட்டில் உள்ள மூத்தவர்கள் கலந்து கொண்ட குடும்ப வழிபாட்டு நிகழ்ச்சி என அது தெரிகிறது. புகைப்படங்களைப் பகிர்ந்து, வெறும், 'நாங்கள்' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார் சமந்தா. விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சமந்தாவிற்கு இந்து மத வழிபாடு, கோயில் வழிபாடு ஆகியவற்றில் மிகுந்த பற்று உண்டு.