ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது!
ADDED : 1 minutes ago
கடந்த வருடத்தில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலியின் ஆர்கா மீடியா தயாரிப்பில் பஹத் பாசில் தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார் என அறிவித்தனர். ஆனால், அது அறிவிப்போடு தேங்கி இருந்தது.
இந்த நிலையில் ஆர்கா மீடியா தயாரிப்பில் சஸ்சான்க் எலேடி இயக்கத்தில் பஹத் பாசில் நடிக்கும் 'டோன்ட் ட்ரப்புள் தி ட்ரப்புள்' படத்தின் படப்பிடிப்பை இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.