மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு
சின்னத்தாயி, தலைவாசல், ஆவாரம் பூ, ஜாதி மல்லி , ரசிகன் என பல படங்களில் கிளாமர் கலந்த வேடங்களில் நடித்தவர் விசித்ரா. திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த விசித்ரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் சீசன் 7, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிலையில் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விசித்ரா, அதுகுறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு ஒரு பதிவும் போட்டு உள்ளார். அதில், தனக்கு அறுவை சிகிச்சை நடந்திருப்பதை தெரிவித்திருப்பவர், வலி வாழ்க்கையை ஒரு கணம் நிறுத்துகிறது. ஆனால் மனித உயிர் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது. எனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினருக்கு நான் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். அவர்களது திறமையும் உறுதியும் என்னை குணப்படுத்தும் பயணத்தில் வழி நடத்தியது. எனது அன்பான கணவர், குடும்பத்தினர், நண்பர்களுக்கு சிறப்பு நன்றி என்று பதிவிட்டுள்ளார் நடிகை விசித்ரா.