உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா

சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா

சிரஞ்சீவி நடிப்பில் கடந்த டிசம்பர் 12ம் தேதி திரைக்கு வந்த படம் மன சங்கர வர பிரசாத் காரு. இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். 200 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 300 கோடி வசூலித்தது. இதையடுத்து சிரஞ்சீவி நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ள படம் விஸ்வாம்பரா. திரிஷா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை வசிஷ்டா இயக்கியுள்ளார்.

இப்படம் குறித்து வசிஷ்டா அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛விஸ்வாம்பரா படத்தில் எட்டு விதமான கெட்டப்புகளில் சிரஞ்சீவியை பார்க்கலாம். ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தனித்துவமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த படத்தின் கிளைமேக்ஸ் தனித்துவமாக இருக்கும். கடைசி 20 நிமிடங்கள் பார்வையாளர்களை திகைக்க வைக்கும். அதனால் இப்படத்தின் கிளைமாக்ஸ் சஸ்பென்ஸாக வைத்துள்ளோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !