உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரேம்ஜியை காதலித்தேனா.... : உண்மையை உடைத்து பேசிய சோனா

பிரேம்ஜியை காதலித்தேனா.... : உண்மையை உடைத்து பேசிய சோனா

ரசிகர்களால் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவர் சோனா. சமீபகாலமாக தொடர்ந்து யுடியூப் சேனலில் பேட்டியளித்து வருகிறார். அதில் சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான பிரேம்ஜி குறித்து கூறியதாவது, பிரேம்ஜி எனக்கு சகோதரர், நண்பர், பெஸ்டி, காதலர் என என்ன உறவு வேண்டுமானாலும் சொல்லாம். ஏனென்றால் , பிரேம்ஜி எனக்கு ஸ்பெஷலானவர். அப்படி கூறுவதற்கு காரணம், நாங்கள் காதலித்தோம் என்கிற அர்த்தமில்லை. இன்று வரை அவர் என்னை சந்தித்த உடன் 'புரொடியுசர் மேடம்' என்று தான் அழைப்பார்.

படப்பிடிப்பில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் என்னை அமைதிப்படுத்தும் நபராக பிரேம்ஜி இருந்தார். என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மற்றும் சிக்கலான நேரங்களில் என்னை என் கூட இருந்து சமாதானப்படுத்தினார் . வெளியுலகில் அவர் எப்படி இருந்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால், எனக்காக எப்போதும் அக்கறை கொண்ட நண்பராகவே இருந்தார். அதாவது, ஒரு நண்பர்கள் குழுவில் அனைவரும் சரக்கு அடித்துவிட்டு ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கும் போது, ஒருவர் மட்டும் தெளிவாக இருந்து மற்றவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ஒரு நண்பர் இருப்பார். அது போன்ற ஒருவர் தான் பிரேம்ஜி.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளிலிருந்து என்னை காப்பாற்றியது அவர் தான். ஆனால், நாங்கள் காதலில் இருந்ததாகவும், அதனால் தான் பிரேம்ஜி 45 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் என்பது வதந்தி தான். அவை அனைத்தும் சினிமா துறையில் வழக்கமாக பரவும் வதந்திகளே தவிர உண்மை இல்லை என நீண்ட நாள் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சோனா .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !