ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல்
பராசக்தி படம் திரைக்கு வந்தபோது ரவி மோகனுக்காகத்தான் இந்த படமே. ஹீரோவா பண்ணினாலும் வில்லனா பண்ணினாலும் அவரால்தான் இந்த படமே ஓடும். எவர்கிரீன் ரவி. என் கண்ணுக்கு வேறு யாருமே தெரியல. ரவிதான் இந்த படத்தில் நம்பர் ஒண்ணா நடித்திருந்தார் என்று வெளிப்படையாகவே கருத்து சொல்லி இருந்தார் பாடகி கெனிஷா. அதோடு, ரவிமோகன் எங்கு சென்றாலும் அவரை நிழல் போல் தொடர்ந்து வரும் கெனிஷா, கடந்த 7-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அப்போது அவருக்கு ரவிமோகன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள பாடகி கெனிஷா, ஒரு பதிவும் போட்டுள்ளார் .
அந்த பதிவில், சிறுவயதிலிருந்தே நான் யாராலும் மதிக்க பட்டதில்லை. ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தேன். நான் மற்றவர்களிடத்தில் சிறிய அன்பு மதிப்பு மட்டுமே எதிர்பார்த்தேன். ரவி மோகன் வந்த பிறகு என் உலகமே மாறிவிட்டது. என்னுடைய செயல்பாடுகள் எண்ணங்கள் காதல் குறித்த பார்வை எல்லாமே ரொம்ப புதுசாக உணர்ந்தேன். மற்றவர்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நாங்கள் உண்மையாக நிம்மதியாக இருக்கிறோம். இதை எங்களை புரிந்து கொண்டவர்களுக்கு நன்றாக தெரியும். எனது கஷ்டமான நேரங்களில் துணையாக நின்று என்னுடைய வெற்றியைக் கூட தன்னோட வெற்றியாக கொண்டாடிய ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார் பாடகி கெனிஷா.