உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்ப, ஜனநாயகன் வரலையா... : ஜூன் 19ல் நுாறு சாமி ரிலீஸ்

அப்ப, ஜனநாயகன் வரலையா... : ஜூன் 19ல் நுாறு சாமி ரிலீஸ்

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடிக்கும் ‛நுாறுசாமி' படம் ரிலீசுக்காக சில மாதங்கள் காத்திருக்கிறது. மே மாதம் படம் வரும் என்று எதிா்பார்க்கப்பட்டது. தேர்தல், மற்ற பட ரிலீஸ் காரணமாக ஜூன் மாதம் தள்ளிப்போனது. திடீரென ஜூன் மாதம் விஜய் நடித்த ஜனநாயகன் வருவதாக இருந்ததால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்காமல் இருந்தது. இப்போது திடீரென இன்று ஜூன் 19ம் தேதி நுாறு சாமி ரிலீஸ் என அறிவித்துள்ளது.

இதனால், ஜனநாயகன் அந்த தேதியில் ரிலீஸ் ஆகாதோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. முதல்வர் விஜயின் டில்லி பயணத்துக்குபின் ஜனநாயகன் படத்தின் சிக்கல்கள் தீரும், படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. ஜனநாயகன் ரிலீஸ் குறித்து அது வரவேண்டிய நேரத்தில் வரும். என்ன பிரச்னை என்பதை வெளியில் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் அதை பிரசுரிக்க முடியாது என்று ஜனநாயகன் படத்தின் இயக்குனர் எச்.வினோத்தும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆகவே இதுவரை ஜனநாயகன் சென்சார் விஷயத்தில் சிக்கல் தீரவில்லை என்று தெரிகிறது. அதனால், முதல்வர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஐ முன்னிட்டு, அதற் குமுன்னதாக ஜூன் 19ல் ஜனநாயகன் வராதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !