பாவனா படம் பார்க்க வந்த மஞ்சு வாரியர் ஏற்படுத்திய பரபரப்பு
சமீபத்தில் மலையாளத்தில் நடிகை பாவனா ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு கதாநாயகியாக நடித்திருந்த 'அனோமி' திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் ஸ்பெஷல் பிரிமியர் காட்சியை பார்ப்பதற்காக நடிகை மஞ்சு வாரியர் வந்திருந்தார். பாவனாவுக்கு மஞ்சு வாரியர் நெருங்கிய தோழி. பாவனா கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு கடினமான நிகழ்வை சந்தித்த சமயத்தில் அவருக்காக முதல் ஆளாக குரல் கொடுத்தவர். இந்த நிலையில் அனோமி படம் பார்க்க வந்த மஞ்சு வாரியரின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது.
அதில் மஞ்சு வாரியரின் கழுத்தில் சிறிய வட்ட வடிவிலான பிளாஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு சலசலப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. மஞ்சு வாரியர் உடல் நலம் சரியில்லாததால் ஏதாவது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறாரா என்கிற கேள்வியையும் சோசியல் மீடியாவில் பலர் எழுப்பினர்.
இந்த நிலையில் அப்படி கழுத்தில் ஒட்டப்பட்ட வட்ட பிளாஸ்டர் பெரும்பாலும் பேருந்து அல்லது படகுகளில் பயணிக்கும்போது காற்றினால் ஏற்படும் தலைசுற்றல், குமட்டல் போன்றவற்றை தவிர்ப்பதற்காக ஒட்டிக்கொள்ளும் ஒரு சிறிய ஸ்டிக்கர் பிளாஸ்டர் தான். மற்றபடி அது ஏதோ அறுவை சிகிச்சை செய்ததற்கான அடையாளம் எல்லாம் இல்லை என்று மீடியாவில் உள்ள மருத்துவம் படித்த சிலர் அது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.