உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....!

'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....!

பொங்கல் வெளியீடாக திரையரங்கில் வெளியான படங்கள் அடுத்தடுத்த வாரங்களில் ஓடிடியில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் பொங்கல் வெளியீடாக வசூலில் லாபம் பெற்ற 'தலைவர் தம்பி தலைமையில்' உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் வெளியாகியுள்ளது.

பேபி கேர்ள்
பிரபல இயக்குநர் வருண் வர்மா இயக்கத்தில், மலையாள நடிகர் நிவின் பாலி, அபிமன்யு ஷம்மி, திலகன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பேபி கேர்ள்'. பிறந்து சில நாட்களாகும் குழந்தை மாயமாகிறது. அந்த வழக்கில் கதாநாயகன் நிவின்பாலி சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து தப்பித்தாரா?இல்லையா? என்ற கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த படம் இன்று(பிப்.12ம் தேதி) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தலைவர் தம்பி தலைமையில்
நிதீஷ் சகாதேவ் இயக்கத்தில், நடிகர் ஜீவா, பிரதான நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளிவந்த திரைப்படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. பொங்கல் வெளியீடாக வெளியாகி அதிக வசூல் செய்த படமும் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படம் நேற்று(பிப்.11ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

கோஹ்ரா சீசன்-2
பாருன் சோப்தி மற்றும் மோனா சிங் முக்கிய வேடங்களில் நடித்துள்ள க்ரைம் த்ரில்லர் தொடர் ஆகும். இந்த தொடர் நேற்று (பிப்.11ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பிரிடேட்டர்: பேட்லாண்ட்ஸ்
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பிரிடேட்டரின் ஏழாவது பாகமான 'பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்' தொடரில் எல்லே ஃபான்னிங் மற்றும் டிமிட்ரியஸ் ஸ்கஸ்டர்-கோலோஅமடாங்கி ஆகியோர் நடித்துள்ளனர். டான் டிராக்டன்பெர்க் இந்த படத்தை இயக்கியுள்ளார். மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று(பிப்.12ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தி கன்ஜூரிங் : லாஸ்ட் ரைட்ஸ்
பிரபல ஹாலிவுட் இயக்குநர் மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் வெளிவந்த திகில் படம் ' தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்'. இந்தப் படம் தி கன்ஜூரிங் திரைப்படத் தொடரின் ஒன்பதாவது பாகமான இந்த படம் நாளை(பிப்.13ம் தேதி) ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !