உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......!

திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......!

டியூட், பைசன் என தீபாவளி ரேஸில் வெளியான திரைப்படங்களைப் பார்த்துச் சலித்துப்போன ரசிகர்களின் கண்களுக்கு இந்த வாரம் வசூலில் வாரிக் குவிந்த காந்தாரா முதல் லோகா சாப்டர் 1 என வரிசை கட்டி நிற்கிறது.

இட்லி கடை
தனுஷ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ராஜ்கிரண், அருண் விஜய், நடிகை நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த படம் இட்லி கடை. தனுஷின் நான்காவது இயக்கமாக வெளிவந்த இந்த திரைப்படம் கிராமத்து இட்லி கடையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நேற்று (அக்.29ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

காந்தாரா சாப்டர்-1
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்த திரைப்படம்'காந்தாரா சாப்டர்-1'. முதல் பாகம் வெற்றியைத் தொடர்ந்து இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, இந்தாண்டில் அதிக வசூல் செய்த படம் என்று பெயர் வாங்கியது. இந்த திரைப்படம் நாளை(அக்.31ம் தேதி) அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

லோகா சாப்டர்-1
மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த முதல் சூப்பர் வுமன் திரைப்படம் 'லோகா சாப்டர்-1'. இந்த திரைப்படம் அனைத்து மொழியிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று ரூ.300 கோடி வரை வசூல் செய்தது. இந்த திரைப்படம் நாளை(அக்.31ம் தேதி) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சொட்ட சொட்ட நனையுது
புதுமுக நடிகர் நிஷாந்த் ரூஷோ நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'சொட்ட சொட்ட நனையுது'. நவீத் பரீத் இந்த படத்தை இயக்கி இருந்தார். பிக்பாஸ் புகழ் வர்ஷினி நடிகையாக நடித்து இருந்தார். முடி உதிர்ந்து வழுக்கைத் தலையால் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் நாளை(அக்.31ம் தேதி) ஆஹா தமிழ் ஓடிடியில் ரிலீசாக உள்ளது.

பிளாக் மெயில்

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்'பிளாக்மெயில்'. கிரைம் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் இன்று(அக்.30ம் தேதி) சன் நெக்ஸ்ட் மற்றும் சிம்பிளிசவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மரியா
இயக்குநர் ஹரி கே சுதன் இயக்கத்தில் நடிகை சாய் ஸ்ரீ பிரபாகரன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்'மரியா'. கன்னியாஸ்திரீகளின் வாழ்க்கையைச் சொல்லும் விதமாக இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் நாளை(அக்.31ம் தேதி) சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !