உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் 'ரிவால்வர் ரீட்டா'. இப்படத்தில் அவருடன் இணைந்து ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, சூப்பர் சுப்பராயன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டார்க் காமெடி கலந்த ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்த இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். ஏற்கனவே இத்திரைப்படம் பல ரிலீஸ் தேதி அறிவித்து இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் ரிவால்வர் ரீட்டா படம் வருகின்ற நவம்பர் 28ம் தேதியன்று திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !