'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி
எஸ் தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 'அரசன்' படத்தின் அறிவிப்பு வீடியோ முன்னோட்டத்துடன் கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றார்கள்.
இப்போது இந்த படத்தில் விஜய் சேதுபதி இணைகிறார் என்ற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்கள். படத்தின் தயாரிப்பாளர் தாணு, 'மனிதம் இணைகிறது, மகத்துவம் தெரிகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விடுதலை 1, 2' ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
‛செக்க சிவந்த வானம்' படத்திற்கு பின் சிலம்பரசன், விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளனர். தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. வெற்றிமாறன் கேட்டுக் கொண்டதால் 'அரசன்' படத்தில் நடிக்க விஜய் சேதுபதி சம்மதித்தார் என்கிறார்கள்.