உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல்

தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல்

தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணாவின் படங்களில் அவரது அதிரடியான வசனங்கள், ஆக் ஷன் காட்சிகள் ஒரு பக்கம் ரசிகர்களை ஈர்க்கிறது என்றால் நிஜத்திலும் அவரது நடவடிக்கைகள் பலரையும் மிரள வைப்பதாகவே இருக்கும். பாலகிருஷ்ணா தனது ரசிகர்களை பார்க்கும்போது எப்போதுமே ஜெய் பாலய்யா என்கிற வார்த்தைகளை உச்சரிப்பார். அதேபோல ரசிகர்களும் எப்போதும் ஜெய் பாலய்யா என்கிற வார்த்தைகளை ஒரு ஸ்லோகம் போல சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவரது அகாண்டா 2 திரைப்படம் நேற்று வெளியாகவில்லை.

இப்படம் தொடர்பாக ஒரு பேட்டியில் அவரிடம் இந்த ஜெய் பாலய்யா என்கிற வார்த்தைகளை நீங்கள் எப்போது முதன் முதலாக கேட்டீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பாலாகிருஷ்ணா, “எப்படி மகாபாரதத்தில் அபிமன்யு கருவில் இருக்கும்போதே பத்ம வியூகம் பற்றி அறிந்து கொண்டானோ அதேபோல என் தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்த வார்த்தைகள் எனக்கும் கேட்டது” என்று கூறியுள்ளார்.

படத்தில் தனது கைகளால் ரயிலையே தடுத்து நிறுத்தும் பாலையா நிச்சயமாக தனது கருவில் இருக்கும்போதே இந்த வார்த்தைகளை கேட்டிருக்க வாய்ப்புண்டு என ரசிகர்கள் பலரும் தங்கள் பங்கிற்கு கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD
2025-12-06 14:13:27

நக்கல் தானே உமக்கு.. ரயில் படத்தில் நிறுத்தினார் பாலு.. அதுக்காக Mummy tummyலேயே கேட்டு இருக்கார் nu solreer. Sollitu அவுங்க விசிறி mela பழிய விசிறி அடிக்கிறீர்